தமன்னா - யோகி பாபு நடிக்கும் 'பெட்ரோமாக்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கபடி குழு கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் பெட்ரோமாக்ஸ் ஆகும்.

Web Desk | news18
Updated: August 9, 2019, 4:57 PM IST
தமன்னா - யோகி பாபு நடிக்கும் 'பெட்ரோமாக்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பெட்ரோமாக்ஸ்
Web Desk | news18
Updated: August 9, 2019, 4:57 PM IST
தமன்னா மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, த்ரிஷா, அஞ்சலி உள்ளிட்ட பலரும் த்ரில்லர் கதைகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில் நடிகை தமன்னாவும் திகில் கலந்த நகைச்சுவை கதையில் நடித்து வருகிறார்.

Also read... மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு விருது!


அதே கண்கள் இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். பெட்ரோமாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, முனீஸ் காந்த், சத்யன், காளி வெங்கட் என பலமான நகைச்சுவை தமன்னாவுடன் இணைந்துள்ளது. இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீஜா, வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Also read... பத்தவச்சிட்டியே பரட்ட...! பிக்பாஸ் வீட்டில் கலகத்தை ஏற்படுத்தும் கஸ்தூரி

இப்படம் தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கபடி குழு கிஷோர் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ‘அனந்தோ பிரம்மா’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை செப்.13-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Loading...

Also see...

First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...