ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை… அழகு முகம் கோரமாக மாறிய கொடுமை

பல் வலிக்கு சிகிச்சை எடுத்த நடிகை… அழகு முகம் கோரமாக மாறிய கொடுமை

நடிகை சுவாதி சதீஷ்

நடிகை சுவாதி சதீஷ்

Actress Swathi Sathish : தற்போது அவரை பார்ப்பவர்களுக்கு அவர் சுவாதி தானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு, முகத்தோற்றம் மாறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பல் வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட நடிகை சுவாதி சதீஷின் முகம் வீங்கிப் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் 2 நாட்களில் வீக்கம் குறைந்து விடும் என்று கூறியிருந்த நிலையில் 3 வாரங்களுக்கும் மேலாக வீக்கம் குறையாமல் இருப்பது நடிகைக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சினிமா மற்றும் பொழுதுபோக்கு துறையில் இருப்பவர்களுக்கு, முக வசீகரம் என்பது மிகவும் முக்கியமானது. முதல் பார்வையில் ஈர்க்கும் நடிகர், நடிகைகளுக்கு இந்த துறையில் மவுசு அதிகம்.

  இதற்காக அவர்கள் ஆயுர்வேதம் முதல் ஆங்கில மருத்துவ சிகிச்சைகள் வரை பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக் கொள்கின்றனர். இந்த சிகிச்சைகளின்போது துரதிருஷ்டவசமாக அவர்கள் எதிர்பார்ப்பதற்கு மாற்றமாக நடந்து விடும். அது அவர்களது கெரியருக்கு சில சமயம் பாதகத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.

  அப்படியொரு சம்பவம் கன்னட நடிகை சுவாதி சதீஷுக்கு ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரை சேர்ந்த சுவாதி, எஃப்.ஐ.ஆர்., 6 டூ 6 உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு 3 வாரத்திற்கு முன்பாக பல் வலி ஏற்பட்டதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையை சுவாதி அணுகியுள்ளார்.

  அங்கு அவருக்கு ரூட் கெனல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் முகம் வீங்கிக் காணப்பட்ட சுவாதி, இந்த வீக்கம் எப்போது குறையும் என்று மருத்துவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2, 3 நாட்களில் குறைந்து விடும் என்று கூறியுள்ளனர்.

  ஆனால் 3 வாரங்கள் கடந்த பின்னரும், சுவாதிக்கு வீக்கம் குறையவில்லை. தற்போது அவரை பார்ப்பவர்களுக்கு அவர் சுவாதி தானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு, முகத்தோற்றம் மாறியுள்ளது.

  இதுபற்றி மருத்துவமனையிடம் கேட்டபோது, சரியான தகவல்களை அளிப்பதில்லை என்று சுவாதி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது அவர் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.

  தவறான மருந்து அளிக்கப்பட்டதால், சுவாதியின் முகத்தோற்றம் மாறியிருக்க கூடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

  Published by:Musthak
  First published:

  Tags: Cinema