Home /News /entertainment /

சன்னி லியோனுக்கு ஜோடியாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

சன்னி லியோனுக்கு ஜோடியாகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

சன்னி லியோன்

சன்னி லியோன்

பட்டா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்திப் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கேரளாவில் தேசிய அளவில் விளையாடும் கால்பந்துவீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட்டில் நீண்டகாலமாக யாருமில்லை. அந்தக் குறையை போக்கியவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். இளமையின் அதிகபடியான வேகமே அவருக்கு வினையானது. பெட்டிங் சர்ச்சையில் சிக்கியவரின் கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவுக்கு வந்தது. கிரிக்கெட்டை அடுத்து அவருக்கு விருப்பமான துறை, சினிமா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியில் இரு படங்களில் நடித்துள்ள அவர் புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் அவருக்கு சிபிஐ அதிகாரி வேடம். அவருக்கு ஜோடியாக நடிக்க சன்னி லியோனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

Also read... ராமனாக நடிக்க மறுத்த இளம் சூப்பர் ஸ்டார்...!

முன்னாள் நீலப்பட நடிகையான இவர் இப்போது பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் இரு சரித்திரப் படங்கள் இவர் நடிப்பில் தயாராகி வருகின்றன. மலையாளத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தியிலும் சில படங்கள் உள்ளன. அத்துடன் ஸ்ரீசாந்துடனும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

பட்டா என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actress Sunny Leone

அடுத்த செய்தி