பிரபல நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சன்னி லியோன் அறிமுகம் ஆகிறார்.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். பல படங்களில் இடம்பெறும் சிங்கிள் பாடலுக்கு சன்னி லியோன் ஆட்டம்போட்டு ரசிர்களை ஈர்த்திருக்கிறார்.
போல்டான படுக்கையறை காட்சிகள், கிளாமர் பாடல்கள் என சன்னி லியோன் இடம் பெறும் படங்கள் பரபரப்பாகவே இருக்கும். இந்நிலையில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி போட்டுள்ளார் சன்னி லியோன்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளியிடும் பணிகள் மும்முரம்… ஃபாரின் ரிலீசுக்கான வர்த்தகம் நிறைவு
இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிந்தனை செய் படத்தை இயக்கிய ஆர்.யுவன் இயக்கியுள்ளார். நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
ஓ மை கோஸ்ட் டீசரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் சன்னி லியோனின் வழக்கமான கிளாமர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஹாட்டான ராணியாக சன்னி லியோன் கவனம் ஈர்க்கிறார். ஒரு நிமிடம் மற்றும் 15 வினாடிகள் ஓடக் கூடியதாக டீசர் கட் செய்யப்பட்டுள்ளது.
நாங்க வாழ்ந்து காட்றோம்.. விமர்சனங்களுக்கு மகாலட்சுமியின் நெத்தியடி பதில்!
ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், தங்க துரை, ரவி மரியா, அர்ஜுனன் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இசை ஜாவித் ரியாஸ். ஒளிப்பதிவு டி. மேன்.
இந்த படத்தை நவம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actress Sunny Leone, Kollywood