நடிகை சுகன்யாவின் தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
90-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுகன்யா. புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆர்த்தி தேவியாக இருந்த இவரை சுகன்யாவாக மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா தான்.
பின்னர், சின்ன கவுண்டர், கோட்டைவாசல், மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ் என நிறைய வெற்றிப் படங்களில் நடித்தார். அதோடு பொதிகை தொலைக்காட்சியில் பெப்ஸி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், சன் டிவி-யில் ஆனந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார்.
மனைவி திருமணத்திற்கு வந்த கணவன் முத்துராசு... விறுவிறுப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் 2
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை 2002-ல் ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சுகன்யா, வெகு விரைவில் அதாவது 2003-ல் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தற்போது சுகன்யா தனது மகளுடன் இருக்கும் படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வசிப்பதாகக் கூறப்படும் சுகன்யாவின் மகளைப் பற்றி அவர் இதுவரை எங்கும் தெரிவித்ததில்லை. ஆகையால் அந்தப் படம் தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.