விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட டிவி சீரியல் நடிகை

விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட டிவி சீரியல் நடிகை
டிவி நடிகை சுபர்ணா
  • Share this:
திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த டிவி நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேற்கு வங்காளம் பர்ட்வானை பூர்வீகமாகக் கொண்ட 23 வயதாகும் இளம் நடிகை சுபர்ணா ஜாஷ்.  இவர், படிப்பதற்காக கொல்கத்தா வந்திருக்கிறார். ஆனாலும் நடிப்பின் மீது தீராக் காதல் கொண்ட இவர் கொல்கத்தாவில் தங்கி நடிப்புத்துறையில் ஜொலிக்க முயற்சி செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி சுபர்ணா துணை நடிகையாக நடித்து வந்தார். திரைப்படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்பிய அவருக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி இரவு தனது அறையில் இருக்கும் மின்விசிறியில் தூக்கில் தொங்கியுள்ளார். இதைப்பார்த்த அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்’ என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்தத்தில் சோர்வாக இருந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.மேலும் படிக்க: யானை மீது ஏறும் காட்சி 30 டேக் எடுக்கப்பட்டது... காடு என்றாலே எனக்கு பயம் - 'காடன்' சீக்ரெட் சொல்லும் விஷ்ணு விஷால்
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்