'இன்னும் ஐந்தாண்டுகளே உள்ளன’- தண்ணீர் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா

மழைநீர், நிலத்தடி நீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் ஆகியவற்றைக் குறித்து பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

'இன்னும் ஐந்தாண்டுகளே உள்ளன’- தண்ணீர் பிரச்னைக்காகக் குரல் கொடுக்கும்  நடிகை ஸ்ரீதிவ்யா
நடிகை ஸ்ரீதிவ்யா
  • News18
  • Last Updated: July 5, 2019, 8:48 PM IST
  • Share this:
தண்ணீர் பிரச்னையால் இந்திய நகரங்கள் பெருமளவு தவித்து வருவதாக நடிகை ஸ்ரீதிவ்யா நியூஸ் 18 வீடியோ பதிவை சுட்டிக்காட்டி ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் நிலவி வருகிறது. மழைநீர், நிலத்தடி நீர் சேமிப்பு, தண்ணீர் சிக்கனம் ஆகியவற்றைக் குறித்து பல விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தண்ணீர் பிரச்னைக்காகக் குரல் கொடுத்து வரும் பிரபலங்களுக்கு மத்தியில், நடிகை ஸ்ரீவித்யாவும் இதுதொடர்பான விழிப்புணர்வை தனது ட்விட்டர் பதிவின் மூலம் ஏற்படுத்தியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், மருது, காக்கி சட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


ஸ்ரீதிவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “நிதி ஆயோக் அறிக்கையின் அடிப்படையில் 2020-ம் ஆண்டில் இந்தியாவின் 21 நகரங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டுவிடும். சிஎன்என் செய்தியின் அடிப்படையில் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் நாட்டின் ஆறாவது பெரும் நகரமாக சென்னை உள்ளது.ஐஎம்டி அறிக்கையின்படி, தென்மேற்குப் பருவமழை 38% வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டை தண்ணீர்ப் பிரச்னையிலிருந்து காக்க இன்னும் நம்மிடம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ளன” எனக் குறிப்பிட்டு நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தி காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீதிவ்யாவின் இப்பதிவுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: வரலாறு காணாத கடும் மழையால் மும்பையில் 19 பேர் பலி!
First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading