’நீங்கள் தரவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ - லாரன்ஸுக்கு ஸ்ரீரெட்டி கோரிக்கை

காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, “நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் மாஸ்டர்” என்று கூறியுள்ளார்.

’நீங்கள் தரவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ - லாரன்ஸுக்கு ஸ்ரீரெட்டி கோரிக்கை
ராகவா லாரன்ஸ் | ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: May 2, 2019, 8:29 PM IST
  • Share this:
நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் லாரன்ஸ் மாஸ்டர் என்று நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

இதற்கு கடந்த ஜூலை மாதத்தில் தனது ஃபேஸ்புக் பதிவில் பதிலளித்திருந்த ராகவா லாரன்ஸ், “ஸ்ரீரெட்டி கூறுவது முற்றிலும் பொய். அவர் தவறு நடந்ததாக கூறப்படும் நேரத்தில் நான் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் ரிபெல் படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அத்திரைப்படம் வெளியாகி சுமார் 7 வருடங்களாகின்றன. இத்தனை நாட்களாக புகார் அளிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார். என்னை ஹோட்டல் அறையில் சந்திக்க வந்த போது ராகவேந்திரா சுவாமி படம் எல்லாம் வைத்திருந்ததாக கூறியுள்ளார். நான் என்ன முட்டாளா? ஹோட்டலின் படுக்கை அறையில் சுவாமி படத்தை வைக்க?


எனக்கு ஸ்ரீரெட்டியை பார்த்தால் இப்போதும் கோபம் வரவில்லை. அவரது சமீபத்திய பேட்டிகளை பார்க்கும் போது அவரது நிலையை எண்ணி வருத்தமாக இருக்கிறது. நான் பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டுகிறேன். ஸ்ரீரெட்டி அங்கே வந்து நான் சொல்லும் காட்சிகளுக்கு நடிப்புத் திறனை நிரூபிக்கட்டும்.சில நடன அசைவுகளை கற்றுத் தருகிறேன். அதன்படி நடனமாடி தனது திறமையை நிரூபிக்கட்டும். அப்படி நான் கடினமான நடன அசைவுகளை செய்து காட்டச்சொல்வேன் என்ற பயமெல்லாம் அவருக்கு வேண்டாம். அவர் மிக எளிதான நடன அசைவுகளை செய்து காட்டினால் போதும். அவர் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் அது போதும். அது தான் முக்கியம்.ஒருவேளை பத்திரிகையாளர்கள் முன் நடித்துக்காட்ட தயங்கினால் அவரது வழக்கறிஞர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் நான் வைக்கும் சோதனையில் தனது நடனத் திறமையை நிரூபித்தால் எனது அடுத்த திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்க நான் தயார் . இந்த அறிவிப்பை அவர் மீதுள்ள பயத்தால் நான் அறிவிக்கவில்லை. எனக்கு பெண்கள் மீதுள்ள மரியாதையால் சொல்கிறேன். இல்லாவிட்டால் என் அம்மாவுக்கு கோயில் கட்டினேன் என்ற பெருமையை இழந்தவனாகி விடுவேன்”. என்று ராகவா லாரண்ஸ் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது காஞ்சனா 3 படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி, “நீங்கள் கொடுக்கவுள்ள வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் மாஸ்டர்” என்று கூறியுள்ளார்.மேலும் “உங்களில் எத்தனை பேர் என்னை மாஸ்டர் படத்தில் பார்க்க விரும்புகிறீர்கள்” என்றும் தன்னைப் பின் தொடர்பவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தல போல வருமா! - வீடியோ பார்க்க

First published: May 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading