இரவில் நடந்தது இதுதான் - நடிகை ஸ்ரீரெட்டி பகீர் விளக்கம்

நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன், தன் வீட்டிற்கு வந்து தன்னை தாக்கியது உண்மை தான் என்று நடிகை ஸ்ரீரெட்டி விளக்கமளித்துள்ளார்.

இரவில் நடந்தது இதுதான் - நடிகை ஸ்ரீரெட்டி பகீர் விளக்கம்
நடிகை ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: March 23, 2019, 7:11 PM IST
  • Share this:
சுப்பிரமணியனின் மனைவி தன்னிடம் கெஞ்சி கேட்டதால்தான் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

சினிமாத்துறையில் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது ரெட்டி டைரி எனும் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் இடையே, பொள்ளச்சி விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்க சென்னை வந்துள்ளார்.

இந்த நிலையில் வியாழன் இரவு சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய வீட்டில் இருந்த போது பைனான்சியர் சுப்பிரமணி தாக்குதல் நடத்தியதாகவும், சி.சி.டி.வி.க்களின் மின் இணைப்பை துண்டித்து விட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி, இந்த தாக்குதலில் தனது வீட்டில் இருந்த கண்ணாடி சேதமானதுடன் தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதுகுறித்து விசாரிக்க ஸ்ரீரெட்டியை போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் காலையிலிருந்து வராத ஸ்ரீரெட்டி, பின்னர் மாலை 3.30 மணியளவில் மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் சென்றார்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீரெட்டிதான் சுப்பிரமணியை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அங்கு சுப்பிரமணிக்கு மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, ஸ்ரீரெட்டி பழச்சாறு குடித்தும். பின்னர் இந்த நாடகத்தை ஸ்ரீரெட்டி நடத்தியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த நான்கு மாதமாக ஸ்ரீரெட்டி வசிக்கும் வீட்டுக்கு சுப்பிரமணிதான் வாடகை கொடுத்து வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது

பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக தெரிவித்ததன் பேரில் ஸ்ரீரெட்டியை எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் நடிகை ஸ்ரீரெட்டி நாடகமாடியது அம்பலமானது.

தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் தன்னைப்பற்றி வெளிவந்த செய்திகளுக்கு தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காக நடிகை ஸ்ரீ ரெட்டி இன்று பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியன், என் வீட்டிற்கு வந்து என்னை தாக்கியது உண்மை. பின்பு நான் தான் காவல் நிலையத்திற்கு அழைத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் செல்ல சொன்னேன். அதேபோல், நேற்று மாலை காவல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்று சமாதானமாக செல்வதாக கூறினேன்.

ஏனென்றால் அவர் மனைவி என்னிடம் மிகவும் கெஞ்சிக் கேட்டார். அதனால் தான் அப்படி செய்தேன். இந்த விஷயத்தில் என் மீது எந்த ஒரு தவறும் கிடையாது.

மேலும் தொடர்ந்து என் மீது அவதூறு பரப்பினால் நீதிமன்றத்திற்கு அல்லது மனித உரிமை ஆணையத்திற்கு செல்வேன் என்று கூறினார். மேலும் தேவைப்பட்டால் சிசிடிவி காட்சிகளையும் காவல் நிலையத்தில் கொடுப்பேன் என்றார்.

வீடியோ பார்க்க: நடிகை ஸ்ரீரெட்டியின் நள்ளிரவு நாடகம் அம்பலமானது எப்படி?

First published: March 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading