தனது ஆடி காரை சேதப்படுத்தியதாக ஸ்ரீரெட்டி போலீசில் புகார்!

தனது ஆடி காரை சேதப்படுத்தியதாக ஸ்ரீரெட்டி போலீசில் புகார்!
  • Share this:
தனது விலையுயர்ந்த காரை சேதப்படுத்தியாக நடிகை ஸ்ரீரெட்டி, சீரியல் மேலாளர் உள்ளிட்டோர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஆந்திர திரையுலகில் முன்னணி நடிகர்கள் மீது குற்றம்சாட்டிய ஸ்ரீரெட்டி அங்கு அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டார்.

ஸ்ரீரெட்டியின் நடவடிக்கைகளால் அவருக்கு ஆந்திராவில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னைக்கு வந்து குடியேறிய ஸ்ரீரெட்டி, ராகவா லாரன்ஸ், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். ஆனால் அக்குற்றச்சாட்டுகளை தமிழ்த் திரைத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. இதனிடையே தனது வாழ்க்கையை மையப்படுத்திய ரெட்டி டைரி என்ற கதையில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் ஸ்ரீரெட்டி.


இந்நிலையில் சென்னை கோயம்பேடு அன்பு நகரில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, தனது வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடி காரை அப்பகுதியில் சின்னத்திரை தொடர்களில் படப்பிடிப்பு நடத்தி வரும் சிலர் சேதப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் தயாரிப்பு மேலாளராக இருக்கும் சந்தோஷ் என்பவர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய கவுதமி!
First published: January 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading