கொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

கொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்
நடிகை ஸ்ரீரெட்டி
  • Share this:
தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகாரளித்துள்ளார்.

தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகியோர் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதற்காக நடிகை ஸ்ரீரெட்டி மீது ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகை ஸ்ரீரெட்டி புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, "தெலுங்கு திரையுலகில் துணை நடிகையான கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் ஆகிய இருவரும் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் என்னைப் பற்றி கடந்த 2 ஆண்டுகளாக அவதூறாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.


தான் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவளிப்பதால், நடிகர் பவன் கல்யாணின் ஆதரவாளர்களான இருவரும் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். எனது  ஆண் நண்பர்கள் குறித்தும், அவர்களுடன் தான் பழகும் விதம் குறித்தும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் அவர்கள், தன் மீது பெட்ரோல் குண்டு வீசி எரிக்க வேண்டும் எனக்கூறி கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

நடிகை ஸ்ரீரெட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீரெட்டி குறித்து பேசினால் பப்ளிசிட்டி கிடைக்கும் என இதுபோன்ற அவதூறுகளை பரப்புவதாக கூறிய ஸ்ரீரெட்டியிடம், விஷால் குறித்த அவரது ஆபாசமான பேச்சு குறித்து கேட்டதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த ஸ்ரீரெட்டி அது ஒரு காமெடி என்றார்.மேலும் படிக்க: ரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று!
First published: February 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்