ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம்

நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் உடல்நலக்குறைவால் மரணம்

கிரிஜா - ஸ்ரீபிரியா

கிரிஜா - ஸ்ரீபிரியா

காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளை ஒரு பிரபல பரதநாட்டியக் கலைஞர், அவருடைய மனைவி கிரிஜா பக்கிரிசாமியும் பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் தாயும், பிரபல பரதநாட்டிய கலைஞருமான கிரிஜா பக்கிரிசாமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, தனது 88வது வயதில் நேற்று மாலை மரணம் அடைந்தார்.

  கிரிஜா பக்கிரிசாமியின் உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு மகள்கள் (மறைந்த மீனாட்சி மற்றும் ஸ்ரீப்ரியா ராஜ்குமார்) மற்றும் ஒரு மகன் ஸ்ரீகாந்த் என 3 பிள்ளைகள் உள்ளனர். கிரிஜா பக்கிரிசாமியின் இறுதிச் சடங்கில் கமல்ஹாசன் மற்றும் கோலிவுட்டின் சில பிரபல நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  நடிகை ஸ்ரீப்ரியா 1974-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான 'முருகன் கட்டிய வழி' மூலம் அறிமுகமானார். தமிழில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்தார். 1980 ஆம் ஆண்டில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்தார். மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள ஸ்ரீப்ரியா, தமிழில் ஓரிரு படங்களையும் தயாரித்துள்ளார். அரசியலிலும் ஈடுபட்டு வரும் அவர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்.

  ஆண் குழந்தைக்கு தாயான கயல் சீரியல் நடிகை... குவியும் வாழ்த்துகள்!

  காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளை ஒரு பிரபல பரதநாட்டியக் கலைஞர், அவருடைய மனைவி கிரிஜா பக்கிரிசாமியும் பரதநாட்டியக் கலைஞர் ஆவார். அவர் 'காதோடு நான் பேசுவேன்' என்ற தமிழ்ப் படத்தையும் இயக்கியுள்ளார் அதோடு தமிழில் பல படங்களையும் தயாரித்துள்ளார். இதில் 'நீயா' என்ற சூப்பர் ஹிட் படமும் அடங்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema