விஜய் டிவி நிகழ்ச்சியில் உருவக்கேலி - எதிர்க்கும் ஸ்ரீப்ரியா

விஜய் டிவி நிகழ்ச்சியில் உருவக்கேலி - எதிர்க்கும் ஸ்ரீப்ரியா
ஸ்ரீப்ரியா
  • News18
  • Last Updated: September 8, 2019, 2:53 PM IST
  • Share this:
விஜய் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் உருவக்கேலி செய்வதற்கு நடிகை ஸ்ரீப்ரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீப்ரியா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் ஸ்ரீப்ரியா, மாலினி 22 பாளையங்கோட்டை, நானே வருவேன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ரீப்ரியா, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உயர்மட்டக்குழு பொறுப்பாளராகவும் உள்ளார்.


சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரீப்ரியா, விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் செய்யும் உருவக் கேலிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், ஒருவரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை. மா.கா.பா, பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை. நீங்கள் ஒருவரையொருவர் கேலி செய்து கொள்ளுங்கள். மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உரிமை யார் கொடுத்தது. #உருவகேலியைஎதிர்போம்” என்று கூறியுள்ளார்.



Loading...

தொடர்ந்து தனது அடுத்த பதிவில், என்னுடன் ட்விட்டரில் இனைந்து நிற்க்கும் 495.8 ஆயிரம் மக்களும் #உருவகேலியைஎதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும். நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன். இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



வீடியோ பார்க்க: சைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?

First published: September 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...