ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்! ஏழை சிறுமிகளுக்காக இயக்குநரின் முன்னெடுப்பு!

ஏலத்துக்கு வரும் ஸ்ரீதேவியின் புடவைகள்! ஏழை சிறுமிகளுக்காக இயக்குநரின் முன்னெடுப்பு!

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

1998-ல் ஜூடால் என்ற படத்தை தொடர்ந்து சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்த ஸ்ரீதேவி,மீண்டும் 2013-ல் இங்லிஷ் விங்லிஷ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ஸ்ரீதேவி ‘இங்லிஷ், விங்லிஷ்’ என்ற படத்தில் நடித்தபோது அணிந்த புடவைகளை ஏலத்திற்கு வரவுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழை சிறுமிகளின் நலனுக்கு அளிக்கப்படும் என படத்தின் இயக்குனர் கவுரி ஷிண்டே கூறியுள்ளார்.

  இந்திய சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் அளவுக்கு புகழ்பெற்ற நடிகை இந்தியாவில் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு புகழின் உச்சத்தில் ஸ்ரீதேவி இருந்தார்.

  1971 இல் வெளியான பூம்பட்டா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஸ்ரீதேவி. இந்தப் படத்திற்கே அவருக்கு கேரள அரசின் விருது கிடைத்தது. 1976 ல் மூன்று முடிச்சு, 1977-ல் 16 வயதினிலே படங்கள் மிகப்பெரும் ஹிட்டாகின.

  ரேஸ் மீதான பிணைப்பு! அஜித்தின் மாஸ் வாட்ஸ் அப் டிபி! அமீர் ஷேர் செய்த போட்டோ!

  1998-ல் ஜூடால் என்ற படத்தை தொடர்ந்து சினிமாவுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்த ஸ்ரீதேவி,மீண்டும் 2013-ல் இங்லிஷ் விங்லிஷ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜித் நடித்திருப்பார்.

  இந்தநிலையில் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி அணிந்திருந்த புடவைகள் அனைத்தையும் ஏலம் விட முடிவு செய்திருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் கௌரி ஷிண்டே அறிவித்துள்ளார்.

  ராஜ ராஜ சோழன் பற்றி பேசிய இயக்குனர் வெற்றிமாறனை சீண்டிய சீரியல் நடிகர்!

  இதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழை சிறுமிகளின் கல்விக்காக நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு, நன்கொடையாக வழங்கப்படும் என்றும் கௌரி ஷிண்டே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Sridevi