விஷாலுக்கு பெண்கள் சப்ளை... குண்டைத் தூக்கிப் போட்ட ஸ்ரீரெட்டி!

விஷாலுக்கு பெண்கள் சப்ளை... குண்டைத் தூக்கிப் போட்ட ஸ்ரீரெட்டி!
நடிகை ஸ்ரீரெட்டி
  • News18
  • Last Updated: June 16, 2019, 2:33 PM IST
  • Share this:
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் விஷால் மீது பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி.

தெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தெலுங்கு சினிமாவில் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ் சினிமாவில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.


நடிகை ஸ்ரீரெட்டி


தற்போது நடிகர் விஷால் குறித்து தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கும் ஸ்ரீரெட்டி, நீங்கள் பல பெண்களை ஏமாற்றியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபியுங்கள்.

விஷால் ஒரு ஏமாற்றுவாதி. என் அம்மாவின் மீதும், எனது தொழிலின் மீதும் சத்தியமிட்டு கூறுகிறேன். நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னைக் கொன்றாலும் சரி, அப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுக்காரர்தான்.

அவரின் பல படங்களில் நடிக்க பல பெண்கள் அவருடன் உறவுவைத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் நல்லநிலையில் உள்ளார்கள். நீங்கள் பணம் கொடுத்து உறவு வைத்துக்கொள்கிறீர்கள் என்பதும் தெரியும். உங்களுக்கு பெண்களை யார் சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும்” என்று தனது பதிவில் காட்டமாக விமர்சித்துள்ளார்.

வீடியோ பார்க்க: புளித்த மாவு... தாக்குதல்... நடந்தது என்ன? - எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

First published: June 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்