அங்கோலா நாட்டு பாரம்பரிய நடனத்தில் அசத்தும் ஸ்ரீதிவ்யாவின் தங்கை

நடிகை ஸ்ரீதிவ்யாவின் தங்கையும் நடிகையுமான ஸ்ரீரம்யா நடனமாடிய வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

அங்கோலா நாட்டு பாரம்பரிய நடனத்தில் அசத்தும் ஸ்ரீதிவ்யாவின் தங்கை
ஸ்ரீதிவ்யா உடன் ஸ்ரீரம்யா
  • Share this:
சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதிவ்யா. முதல் படமே ஹிட்டடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. அதனால் தொடர்ந்து காக்கி சட்டை, ஈட்டி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் 2016-ம் ஆண்டுக்கு பின்னர் அதிகமாக படங்களில் தலைகாட்டவில்லை. தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ஒத்தைக்கு ஒத்த என்ற படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.

ஸ்ரீதிவ்யாவின் சகோதரி தமிழில் யமுனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மூன்று தெலுங்கு படத்திலும் ஸ்ரீரம்யா நடித்துள்ளார். ‘1940 Lo Oka Gramam' என்ற படத்தில் ஸ்ரீரம்யா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக 2008-ம் ஆண்டு ஆந்திர அரசு சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும் வழங்கியுள்ளது.


இந்நிலையில் மத்திய ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் கலாச்சார நடனமாடி அசத்தியுள்ளார் ஸ்ரீரம்யா. அதற்கான வீடியோவை கடந்த 2018-ம் ஆண்டு ஸ்ரீரம்யா சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்கும் நிலையில் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading