தாலி கட்டும் வீடியோவை பதிவிட்ட சோனியா அகர்வால் - இரண்டாவது திருமணத்துக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்

நடிகை சோனியா அகர்வால் வெளியிட்ட திருமண வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

தாலி கட்டும் வீடியோவை பதிவிட்ட சோனியா அகர்வால் - இரண்டாவது திருமணத்துக்கு வாழ்த்து சொல்லும் ரசிகர்கள்
நடிகை சோனியா அகர்வால்
  • Share this:
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் உடன் மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்த சோனியா அகர்வால் 2006-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 4 ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தாலி கட்டும் திருமண வீடியோ ஒன்றை பகிர்ந்து 3 நாட்களுக்கு காத்திருங்கள் என்று சோனியா அகர்வால் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நினைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சோனியா அகர்வால் திருமணம் செய்யப்போகும் நபர் யார் என்பது குறித்து அறிந்து கொள்ளவும் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: நடிகை வனிதாவிற்கு கொலை மிரட்டல் - சூர்யா தேவி கைது

ஆனால் இந்த வீடியோ சோனியா அகர்வால் நடிக்கும் படத்தின் புரமோஷனாக இருக்கலாம் என்றும், அவர் நடிக்கும் சீரியலின் புரமோஷனாக இருக்கும் என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். உண்மை தெரிய சோனியா அகர்வால் சொன்னபடி 3 நாட்கள் காத்திருப்போம்
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading