Home /News /entertainment /

இரண்டாவது கல்யாணமா? சுடச்சுட பதில் கொடுத்த நடிகை சோனியா அகர்வால்!

இரண்டாவது கல்யாணமா? சுடச்சுட பதில் கொடுத்த நடிகை சோனியா அகர்வால்!

சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்

ரசிகர் ஒருவர் சோனியாவிடம் உங்களுக்கு திருமணமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    2வது திருமணம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகருக்கு கூலாக ரிப்ளை செய்துள்ளார் நடிகை சோனியா அகர்வால்.

    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனியா அகர்வால். காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து மதுர படத்திலும் நடித்தார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சோனியா அகர்வாலும் இயக்குனர் செல்வராகவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சோனியா சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்பு பல தனிப்பட்ட காரணங்களால் சோனியா அகர்வாலும் செல்வராகவனும் விவாகரத்து வாங்கி பிரிந்தனர். பின்பு சோனியா அகர்வால் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதே போல் செல்வராகவனும் கீதாஞ்சலியை 2வது  திருமணம் செய்துக் கொண்டார்.

    இதுக்கு மேல யாருக்கும் பொறுமை இல்ல.. அந்த கதைக்கு முடிவு கட்டிய பாரதி கண்ணம்மா இயக்குனர்!

    தற்போது சோனியா அகர்வால் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இடையில் சின்னத்திரையில் ஒருசில சீரியல்களிலும் நடித்தார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோனியா அகர்வால் அவ்வப்போது ஷூட்டிங் படங்கள், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் புகைப்படங்கள், அவுட்டிங் செல்லும் படங்களை ஷேர் செய்வார். இந்நிலையில் சமீபத்தில் கையில் மெஹந்தி வைத்திருக்கும்படியான புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்தார்.

    அதை பார்த்த ரசிகர்களில் ஒருவர் சோனியாவிடம் உங்களுக்கு திருமணமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு உடனே போஸ்டில் பதில் கூறியுள்ளார் சோனியா.




    சிரித்தப்படியே “ஏன்? உங்களுக்கு மட்டும் தான் நடக்கணுமா?” என கேட்டவர் என்னுடைய திருமண மெஹந்தி இவ்வளவு சிம்பிளாக இருக்காது என கூறியுள்ளார். ஆக இந்த மெஹந்திக்கு பின்னாடி சோனியா அகர்வாலின் 2வது திருமணம் இல்லை என்ற பதில் ரசிகர்களுக்கு கிடைத்து விட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Kollywood, Selva ragavan, Sonia agarwal

    அடுத்த செய்தி