பச்ச மாங்கா படத்தில் அதிக கவர்ச்சி... என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா

பச்ச மாங்கா படத்தில் அதிக கவர்ச்சி... என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் - நடிகை சோனா
நடிகை சோனா
  • Share this:
என்னை தவறாகச் சித்தரிக்க வேண்டாம் என்று நடிகை சோனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வலம் வந்த கவர்ச்சி நடிகைகளில் சோனாவும் ஒருவர். கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா 'பச்சமாங்கா' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை சோனா,"பச்சமாங்கா திரைப்படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். இயக்குநர் பாலு மகேந்திரா திரைப்படங்கள் போல பக்கா க்ளாஸியான படம் . அப்படத்தின் ட்ரெய்லரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன்.


இந்தப் படத்தை என் உடை மூலமாக கவர்ச்சி படம் என்றோ, என்னை கவர்ச்சி நடிகை என்றோ சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாப்பாத்திரமும் அப்படியே. படம் வந்தபின் இந்த வார்த்தையை அனைவரும் சொல்வார்கள்" என்றார்.

பச்சமாங்கா திரைப்படம் சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடிகை சோனா தான் இனி கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். இந்தப் பச்சை மாங்கா படம் அப்படி கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட படமாக இருந்தால் பிரதாப் போத்தன் எப்படி நடிப்பார்? என்ற கேள்வியையும் நடிகை சோனா எழுப்பியுள்ளார்.

First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்