மகளுக்கு நாயகன் தேடும் முன்னாள் நடிகை!

சிவரஞ்சனி

1992-ல் வெளியான தலைவாசல் படம் சிவரஞ்சனியை அனைவரும் அறிந்த நடிகையாக உயர்த்தியது.

 • Share this:
  முன்னாள் நடிகை சிவரஞ்சனி தனது மகளை நாயகியாக அறிமுகப்படுத்த முன்னணி நாயகன் மற்றும் இயக்குனராக தேடி வருகிறார்.

  1990-ல் ஹிருதய சாரம்ராஜ்யா கன்னடப் படத்தில் அறிமுகமானவர் நடிகை சிவரஞ்சனி. அதே வருடம் தமிழில் வெளியான மிஸ்டர் கார்த்திக் படத்தில் நடித்தார். 1992-ல் வெளியான தலைவாசல் படம் சிவரஞ்சனியை அனைவரும் அறிந்த நடிகையாக உயர்த்தியது. கமலின் கலைஞன், விஜயகாந்தின் ராஜதுரை, பிரபுவின் சின்ன மாப்ள உள்பட இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில மலையாளப் படங்களும் இதில் அடக்கம்.

  1994-ல் ஆமி என்ற தெலுங்குப் படத்தில் முதல்முறையாக நடித்தார். தெலுங்குக்காக தனது பெயரை ஊஹா என்று மாற்றிக் கொண்டார். முதல் படமே சிறந்த நடிகைக்கான நந்தி விருதை அவருக்கு வாங்கித் தந்தது. தொடர்ந்து தெலுங்கில் நடித்தவர் தெலுங்கு நடிகர் மேகா ஸ்ரீகாந்தை 1997-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு குட்பை சொன்னார். அவருக்கு இரு மகன்களும் மேதா என்ற மகளும் உள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  sivaranjani family, sivaranjani daughter, medha srikanth, sivaranjani meaning, sivaranjani instagram, micset sivaranjani wikipedia, sivaranjani song lyrics, sivaranjani 2019, sivaranjani tamil movies list, சிவரஞ்சனி, நடிகை சிவரஞ்சனி, சிவரஞ்சனி மகள், மேதா ஸ்ரீகாந்த்,
  குடும்பத்துடன் சிவரஞ்சனி


  மேகா, ருத்ரமாதேவி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்திருந்தார். தற்போது டீன்ஏஜ் பருவத்தை எட்டியிருக்கும் அவரை நாயகியாக அறிமுகப்படுத்த நல்ல கதை, இயக்குனர், ஹீரோ என்று சிவரஞ்சனியும், அவரது கணவர் ஸ்ரீகாந்தும் தேடி வருகிறார்கள். விரைவில் மேதாவின் நாயகி அறிமுகம் தெலுங்கில் நிகழ இருக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: