• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? வைரலாகும் படம்!

நடிகை சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? வைரலாகும் படம்!

சிம்ரன்

சிம்ரன்

கடந்த 2003-ம் ஆண்டு தீபக் என்ற தனது சிறு வயது நண்பரை திருமணம் செய்துக் கொண்டார் சிம்ரன்.

  • Share this:
    நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.

    வி.ஐ.பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதையடுத்து விஜய்யுடன் ஒன்ஸ் மோர், விஜய் - சூர்யா இணைந்து நடித்த நேருக்கு நேர் ஆகியப் படங்களில் நடித்து, ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தார்.

    டான்ஸ், நடிப்பு என அனைத்திலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சிம்ரன் கனவுக்கன்னியாக வலம் வந்தார். கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்த சிம்ரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்காமல் இருந்தார். அந்த வாய்ப்புக்காக தான் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

    இந்நிலையில் பேட்ட படத்தில், சிம்ரனின் ஆசை நிறைவேறியது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த அந்தப் படத்தில், ரஜினியுடன் இணைந்து நடித்தார் சிம்ரன். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை கடந்த 2003-ம் ஆண்டு தீபக் என்ற தனது சிறு வயது நண்பரை திருமணம் செய்துக் கொண்டார் சிம்ரன்.

    Actress Simran with her sons, simran husband, simran sons, simran son name, simran family picture, simran family photo, சிம்ரன் குடும்பம், சிம்ரன் கணவர், சிம்ரன் மகன்கள், நடிகை சிம்ரன் மகன், Actress Simran, simran movies, simran dance, simran selfie, simran lockdown selfies, simran songs, நடிகை சிம்ரன், சிம்ரன் திரைப்படங்கள், சிம்ரன் நடனம், சிம்ரன் செல்பி, சிம்ரன் லாக்டவுன் செல்பி, சிம்ரன் பாடல்கள்
    மகன்களுடன் சிம்ரன்


    இவர்களுக்கு அதீப் மற்றும் ஆதித் வீர் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை சிம்ரனின் மகன்களா இது என ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: