Simran: நடிகை சிம்ரனின் லாக்டவுன் பொழுதுபோக்கு இது தான்!

சிம்ரன்

90-களில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன், விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

  • Share this:
    இந்த லாக்டவுனை வித விதமான செல்ஃபி எடுத்து நேரம் செலவழித்து வருகிறார் நடிகை சிம்ரன்.

    கொரோனா 2-ம் அலை இந்தியாவில் படு வேகமாக பரவி வருகிறது. அதோடு பல உயிர்களையும் பலி வாங்கியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. அதோடு தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

    இதனால் பிரபலங்கள் பலரும் வீட்டிலிருந்தவாறு தங்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை சிம்ரன் லாக்டவுனில் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இத்தனை வயதிலும் தன் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் சிம்ரனை புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.



    90-களில் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை சிம்ரன், விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் இருந்தது. பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட படத்தில் அது நிறைவேறியது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: