வாலி பட பாடலுக்கு அதே ஸ்டைலில் நடனம்: டிக்டாக்கில் வைரலாகிறார் சிம்ரன்..!

20 வருடங்களுக்கு முன்பு நடனம் ஆடிய வாலி பட பாடலுக்கு, தற்போது அதே வேகத்துடன் நடனம் ஆடி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் சிம்ரன்.

வாலி பட பாடலுக்கு அதே ஸ்டைலில் நடனம்: டிக்டாக்கில் வைரலாகிறார் சிம்ரன்..!
20 வருடங்களுக்கு முன்பு நடனம் ஆடிய வாலி பட பாடலுக்கு, தற்போது அதே வேகத்துடன் நடனம் ஆடி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் சிம்ரன்.
  • Share this:
வாலி படத்தில் அஜித்துடன் ஆடிய ஸ்டைலான நடனத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை சிம்ரன் மீண்டும் ஆடியுள்ளார்.

இந்திய அளவில் திரைப் பிரபலங்களை டிக்டாக் நிறுவனம் நாடி அவர்களிடம் டிக்டாக்கை பயன்படுத்தக் கோரியுள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட பிரபலங்கள் டிக்டாக்கில் ஆக்டிவாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் 1999-ம் ஆண்டு வெளியான வாலி படத்தில் இடம் பிடித்திருந்த ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு மீண்டும் அதே ஸ்டைலுடன் நடனமாடியுள்ளார். இதைக் கண்டு அவரின் ரசிகர்கள் நடனத்தை வைரலாக்கி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ”வயசானாலும் ஸ்டைலும் அழுகும் மாறல” போன்ற வசனங்களைப் பகிர்ந்து வருகிறார்கள் சிம்ரன் ரசிகர்கள்.


தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்த சிம்ரன் சமீபத்தில் ரஜினிக்கு ஜோடியாக ’பேட்ட’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்கு வயதாகவில்லை என்று "Never too late to dance!" என குறிப்பிட்டுள்ளார்.

Also see...

 
First published: March 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading