Home /News /entertainment /

என் உடலைப் பயன்படுத்திக் கொண்டார்கள், வாழ்க்கைக்காக ஏங்கினேன் - இறப்பதற்கு முன் சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம்

என் உடலைப் பயன்படுத்திக் கொண்டார்கள், வாழ்க்கைக்காக ஏங்கினேன் - இறப்பதற்கு முன் சில்க் ஸ்மிதா எழுதிய கடிதம்

சில்க் ஸ்மிதா

சில்க் ஸ்மிதா

கடந்த ஐந்து வருடங்களாக ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாக கூறி வருகிறார். அந்த வாழ்க்கைக்காக நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா?

  தற்கொலை செய்துக் கொள்ளும் முன்பு நடிகை சில்க் ஸ்மிதா எழுதி வைத்த கடிதம் தற்போது பேசுபொருளாகி வருகிறது.

  வட்லப்பட்டியில் விஜயலட்சுமியாக பிறந்த சில்க் ஸ்மிதா கோலிவுட்டின் கவர்ச்சி பொம்மையாக மட்டும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். தென்னிந்தியத் திரைப்படத் துறையில் அவருக்கு மாற்றான இன்னொரு நடிகையை இன்றுவரை கண்டறிய முடியவில்லை.

  80-கள் மற்றும் 90-களின் முற்பகுதியில் திரையுலகில் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிகம் தேடிய நடிகை சில்க் ஸ்மிதா தான். அந்தளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், பணச்சுமை மற்றும் காதல் தோல்வியால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக, 1996-ல் தனது 35 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இறப்பதற்கு முன் சில்க் ஸ்மிதா தனது சோகமான வாழ்க்கையைப் பற்றி, கைப்பட எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  கலைஞரால் இசைஞானி என்று போற்றப்பட்ட இளையராஜா ஐயாவுக்கு அன்பும் வாழ்த்தும் - உதயநிதி ஸ்டாலின்

  அந்த கடிதத்தில், “ஒரு நடிகையாக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். என்னை யாருக்கும் பிடிக்கவில்லை. பாபு (டாக்டர் ராதாகிருஷ்ணன்) மட்டுமே சிறிது அன்புடன் நடந்து கொண்டார். அனைவரும் என் உழைப்பை சுரண்டினார்கள். என் வாழ்க்கையில் பல ஆசைகள் இருக்கிறது.

  அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஆனால் நான் எங்கு சென்றாலும் எனக்கு நிம்மதி இல்லை. எல்லோருடைய செயல்களும் என்னை தொந்தரவு செய்தன. அதனால் ஒருவேளை மரணம் என்னைக் கவர்ந்திருக்கலாம். எல்லோருக்கும் நல்லது செய்திருக்கிறேன். இன்னும் என் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கிறது? கடவுளே இது என்ன நியாயம்? நான் சம்பாதித்த சொத்தில் பாதியை பாபுவுக்கு கொடுக்க வேண்டும். நான் அவரை மிகவும் நேசித்தேன், நேசித்தேன், உண்மையாக நேசித்தேன். அவர் என்னை ஏமாற்ற மாட்டார் என்று தான் நம்பினேன். ஆனால் அவரும் என்னை ஏமாற்றிவிட்டார்.

  கடவுள் இருந்தால் கண்டிப்பாக அவர் தண்டிக்கப்படுவார். அவர் எனக்கு செய்த கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் எனக்கு வலித்தது. நாங்கள் செய்வது தான் நியாயம் என்று நினைக்கும் அந்த குழுவில் பாபுவும் உள்ளார். என்னிடம் வாங்கிய நகைகளை திருப்பி தரவில்லை. இனியும் நான் வாழ விரும்பவில்லை. கடவுள் என்னை ஏன் படைத்தார்? ராமுவும் ராதாகிருஷ்ணனும் என்னை மிகவும் தூண்டினார்கள். அவர்களுக்காக நான் பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் என்னை மரணத்திற்கு தள்ளி விட்டார்கள்.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இசைஞானி இளையராஜா!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பலர் என் உடலைப் பயன்படுத்தினர். பலர் எனது வேலையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். பாபுவைத் தவிர யாருக்கும் நான் நன்றி சொல்லவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக ஒருவர் எனக்கு வாழ்க்கை தருவதாக கூறி வருகிறார். அந்த வாழ்க்கைக்காக நான் எவ்வளவு ஏங்கினேன் தெரியுமா? ஆனால் அதெல்லாம் வெறும் வார்த்தைகள் என்று தெரிந்ததும் உடைந்துப் போனேன். என்னால் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது. இந்தக் கடிதத்தை எழுத மிகவும் சிரமப்பட்டேன். எனக்குப் பிடித்த நகைகளைக் கூட நான் வாங்கவில்லை. இனி யாரிடம் போகும்? எனக்கு தெரியாது" என்று குறிப்பிட்டுள்ளார் சில்க் ஸ்மிதா.
  Published by:Shalini C
  First published:

  Tags: Tamil Cinema

  அடுத்த செய்தி