விஜய்சேதுபதி பட ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன்

விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’ படத்தில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன் அந்தப் படத்தின் படப்பிடிப்பிலிருந்து திடீரென வெளியேறியுள்ளார்.

விஜய்சேதுபதி பட ஷூட்டிங்கிலிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன்
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன்
  • Share this:
2015-ம் ஆண்டு புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.

கலையரசன், ஜகபதிபாபு, சாய் தன்ஷிகா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த ‘லாபம்’ படத்தின் டப்பிங் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கின. விஜய் சேதுபதி, கலையரசன் உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததை அடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.


இந்நிலையில் ‘லாபம்’ திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தற்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிகமாக பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக படப்பிடிப்பு தளத்திலிருந்து ஸ்ருதிஹாசன் வெளியேறியுள்ளார்.ஒரு சில இடங்களில் முதல்முறையாக படப்பிடிப்பு நடைபெறுவதால் அதைக் காண அப்பகுதி மக்கள் அதிக அளவில் கூடுவதாகவும், மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் படக்குழு திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.


கொரோனா அச்சம் குறித்து ட்விட்டரில் எழுதியிருக்கும் ஸ்ருதிஹாசன், “கொரோனா எல்லோருக்கும் தீவிரமான உயிராப்பத்தானது. கொரோனா தொற்று இன்னும் முடிவடையவில்லை. ஒருவேளை விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படாவிட்டால் ஒரு மனிதராக ஒரு நடிகராக என்னுடைய பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading