முதல் முறையாக விமலுக்கு ஜோடியான ஸ்ரேயா!

அதைத் தொடர்ந்து தற்போது கேரளாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்ல் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப் படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

முதல் முறையாக விமலுக்கு ஜோடியான ஸ்ரேயா!
ஸ்ரேயா - திரைப்பட நடிகை
  • News18
  • Last Updated: July 13, 2019, 7:50 PM IST
  • Share this:
‘சண்டக்காரி தி பாஸ்’ படத்தின் மூலம் விமலுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார் நடிகை ஸ்ரேயா.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'மை பாஸ்'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது சண்டகாரி- தி பாஸ்.

இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனின் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது கேரளாவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில்ல் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். இந்தப் படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஆக்‌ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் விரைவில் டீசர், ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமல் நடிப்பில் வெளியான களவாணி 2 ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அந்தப் படத்தைத் தொடர்ந்து சண்டக்காரி படமும் வெளியாக உள்ளது.இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக முதன்முறையாக ஸ்ரேயா நடிக்கிறார்.

வீடியோ பார்க்க: புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கொதித்தெழுந்த சூர்யா!

First published: July 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading