லண்டனில் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயாவை காப்பாற்றிய விமல்... என்ன நடந்தது?

லண்டனில் போலீசாரிடம் சிக்கிய நடிகை ஸ்ரேயாவை காப்பாற்றிய விமல்... என்ன நடந்தது?
நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா
  • News18
  • Last Updated: December 11, 2019, 10:59 AM IST
  • Share this:
லண்டனில் சண்டகாரி படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது போலீசாரிடம்  நடிகை ஸ்ரேயா சிக்க அவரை விமல் காப்பாற்றியுள்ளார்.

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் 'மை பாஸ்'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது சண்டகாரி- தி பாஸ்.

விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லட் ,விஜய்காந்த்  நடித்த அரசாங்கம் ,வினய் நடித்த மிரட்டல் ,திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் ஆர். மாதேஷ் இயக்கத்தில் உருவாகிறது இந்தப் படம்.


Also see... #ThisHappened2019 : ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 சினிமா பெண் பிரபலங்கள்... யார் தெரியுமா?

இந்த படத்துக்கு அம்ரீஷ் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனதால் அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய லண்டன் போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர். எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள் என்று போலீசார் ஸ்ரேயாவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த நடிகர் விமல் அவரிடம் உள்ள ஆவணங்களை போலீசாரிடம் காண்பித்து இங்கு படப்பிடிப்பிற்காக வந்ததை கூறி ஸ்ரேயாவை காப்பாற்றியுள்ளார்.

Also see...
First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்