Home /News /entertainment /

ரூ.200 கொடுத்தால் நடனம்... ஏழைகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ஸ்ரேயா!

ரூ.200 கொடுத்தால் நடனம்... ஏழைகளுக்கு உதவ நிதி திரட்டும் நடிகை ஸ்ரேயா!

ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற ஸ்ரேயா 37 வயதை கடந்துள்ளார். அண்மையில் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா தற்பொழுது வரை உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற ஸ்ரேயா 37 வயதை கடந்துள்ளார். அண்மையில் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா தற்பொழுது வரை உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா தனது கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ் உடன் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் வசித்து வருகிறார்

    ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவ நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகை ஸ்ரேயா.

    கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவழுதும் மூன்றாவது முறையாக வரும் 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் தொடர் ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் உள்ளிட்டோருக்கு உதவுவதற்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் நடிகை ஸ்ரேயா அறிவித்துள்ளார்.

    அதில், தன்னுடன் நடனம், யோகா போன்றவற்றை மேற்கொள்ள விரும்புபவர்கள் தான் அறிவித்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.200 நன்கொடை அளிக்க வேண்டும். அதன் ரசீதை மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். நன்கொடை அளித்தவர்களில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்கள் தன்னுடன் நேரலையில் பங்கேற்கலாம் என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.



     




    View this post on Instagram




     

    I Have teamed up with The Kindness Foundation and Chennai Task Force to help with their covid relief efforts They’re addressing those who are most vulnerable: destitute elderly, daily wage laborers, the homeless, orphans, and disabled - Will be offering two lucky winners a chance to dance, do some yoga, or whatever floats your boat to brighten up your quarantine - all you have to do to enter is donate Rs. 200 and email your receipt to give@thekindnessproject.in The contest will run until Saturday at 8pm, and winners will be contacted on Sunday You can swipe right for details or head to The Kindness Foundation page 🤩🤩🤩🤩 let’s have some fun together and do some good too!


    A post shared by Shriya Saran (@shriya_saran1109) on






    நடிகை ஸ்ரேயா தனது கணவர் ஆண்ட்ரே கோஸ்சீவ் உடன் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Actress Shriya

    அடுத்த செய்தி