திருப்பதி கோயில் வளாகத்துக்குள் முத்தமிட்டுக் கொண்ட நடிகை ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரேயாவுக்கு அதிக படங்கள் இல்லாதிருந்த காலகட்டத்தில் (2018) ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆன்ட்ரி கோஸ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கும் படங்களைவிட , கணவருடன் இருக்கும் புகைப்படங்களே அதிகம் வெளியாயின . ஸ்ரேயாவே அதனை வெளியிட்டு வந்தார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நேற்று முன்தினம் ஸ்ரேயா கணவருடன் திருப்பதி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் . அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின . கோயில் வளாகத்தினுள் ஆன்ட்ரி கோஸ்சீவா ஸ்ரோவுக்கு முத்தம் தரும் புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது . இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
கோயிலுக்குள் முத்தமிட்டு அதன் புனிதத்தை ஸ்ரேயா வும், அவரது கணவரும் கெடுத்துவிட்டதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர் . அன்பு மிகுதியில் நெற்றியில் கொடுக்கப்படும் முத்தம் தவறில்லை என்று ஸ்ரோயாவுக்கு ஆதரவாகவும் சிலர் பதிவிட்டுள்ளனர் .
Also read... அட்லி, ஷாருக்கான் இணையும் படத்தின் பெயர் என்ன தெரியுமா?
ஸ்ரேயா கடைசியாக தமிழில் கார்த்தின் நரேன் இயக்கிய நரகாசூரன் படத்தில் நடித்தார் . அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை . தெலுங்கில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்துள்ளார் . இவை தவிர தற்போது அவர் கைவசம் எந்தப் படங்களும் இல்லை . Published by: Vinothini Aandisamy
First published: September 16, 2021, 11:39 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.