கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டேனா? - நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்

கொரோனா பாதித்து தனிமைப்படுத்தப்பட்டேனா? - நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் விளக்கம்
ஷ்ரத்தா ஸ்ரீநாத்
  • Share this:
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை சந்தித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தும்படி அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தொடர்ந்து அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது விஷாலுக்கு ஜோடியாக சக்ரா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனா பாதித்த பயணிகளுடன் விமானத்தில் பயணித்ததால் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் ஷ்ரத்தா அதை முற்றிலும் மறுத்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, நான் மார்ச் மாதம் 12, 15 தேதிகளில் ஹைதராபாத் - சென்னை இடையே விமான பயணம் மேற்கொண்டேன்.


நான் பயணித்த விமானத்தில் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை. கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் என்வீட்டுக்கு வந்து என்னை சுயதனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறவில்லை. நான் இதைப்பற்றி என்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பேச விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க: அவனை விளக்குமாற்றால் அடித்து விரட்டுங்கள் மோடி அய்யா - சூரி


First published: April 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading