ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜயின் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.. வைரல் ரீல்ஸ் வீடியோ

விஜயின் ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.. வைரல் ரீல்ஸ் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Shivani Narayanan ; ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடியுள்ள ஷிவானியின் வைரல் வீடியோவை பாத்தீங்களா ?

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் ஷிவானி நாராயணனும் ஒருவர். இவர் பகல் நிலவு என்ற சீரியல் மூலம்  அறிமுகமானார்.அதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார்.பின்பு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பின்பு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது.

  கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ஷிவானி நடித்திருந்தார். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

  ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அடிக்கடி ட்ரெண்டிங் டான்ஸ் வீடியோக்களை பகிர்வார். அந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது.

  ஷிவானி லேட்டஸ்டாக விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோவை இதுவரை 80, 000-த்தி

  ற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.


  இந்த வீடியோவில் ஆரஞ்சு நிற பார்ட்டி வியர் உடை அணிந்துள்ள ஷிவானி நாராயணன் சூப்பராக நடனமாடியிருக்கிறார்.


  ஷிவானி நாராயணன் சமீபத்தில் மழையில் நனைந்தப்படி பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

  Published by:Tamilmalar Natarajan
  First published:

  Tags: Cinema, Video