ராஜ்குந்த்ராவை பிரிகிறாரா நடிகை ஷில்பா ஷெட்டி?

ராஜ்குந்த்ரா - ஷில்பா ஷெட்டி

ராஜ்குந்த்ராவை விட்டு பிரிய ஷில்பா ஷெட்டி பிரியவிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன

 • Share this:
  நடிகை ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ராஜ்குந்த்ராவை பிரிவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

  பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா. இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம், ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார் ராஜ் குந்த்ரா.

  இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கிடையே ராஜ்குந்த்ராவை விட்டு பிரிய ஷில்பா ஷெட்டி பிரியவிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ராஜ் குந்த்ராவை பிரிந்து, அவர் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் இல்லாமல், புது வாழ்க்கையை துவங்க நடிகை ஷில்பா ஷெட்டி விரும்புவதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இருந்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: