துள்ளுவதோ இளமை ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்!

துள்ளுவதோ இளமை ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்!
  • Share this:
துள்ளுவதோ இளமை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஷெரின் வெளியிட்டுள்ளார்.

கஸ்தூரிராஜா, செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஷெரின்.

தொடர்ந்து விசில், உற்சாகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ஷெரின் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரீ எண்ட்ரி கொடுத்தார். இந்நிகழ்ச்சி அவருக்கு அதிக ரசிகர்களைப் பெற்று தந்தது. இதையடுத்து சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் ஷெரின், ஊட்டியில் துள்ளுவதோ இளமை படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


துள்ளுவதோ திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளாகியிருக்கும் நிலையில் ஷெரின் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருப்பதோடு லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

 
View this post on Instagram
 

Mother of all throwbacks 🙈 . . . . . . . . . #sherin #ootd #ootdfashion #biggbosstamil #biggboss3 #love #tamil


A post shared by Sherin Shringar (@sherinshringar) on


கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே திரைத்துறை பிரபலங்கள் பலரும் சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது, ரசிகர்களுடன் உரையாடுவது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மீண்டும் வருகிறது சக்திமான் - விரைவில் அறிவிப்பு!
First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading