Home /News /entertainment /

‘ஓ சொல்றியா மாமா’பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷாலு ஷம்மு - வீடியோ

‘ஓ சொல்றியா மாமா’பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷாலு ஷம்மு - வீடியோ

ஷாலு ஷம்மு

ஷாலு ஷம்மு

நடிகை ஷாலு ஷம்மு புஷ்பா படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

    நடிகை ஷாலு ஷம்மு திரைப்படங்கள் மூலம் ஃபேமஸ் ஆனதை விட இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் தான் பிரபலமடைந்தார் என்று கூறலாம். ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு தோழியாக நடித்திருப்பார்.

    இந்த திரைப்படம் வெற்றிப்பெற்றதால் ஷாலு ஷம்மு திருட்டு பயலே 2, ரெக்க ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சில படங்களில் மிகச்சிறிய கதாபாத்திரங்களில் ஷாலு நடித்துள்ளார்.இவரின் இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். அடிக்கடி தனது டான்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துக்கொள்வார்.

    அதுமட்டுமில்லாமல் விதவிதமாக கவர்ச்சியாக போட்டோஷூட்களையும் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.அந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாவது வழக்கம்.



    இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வெற்றிப்பெற்றது.அந்த பாடலில் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனமாடியிருந்தார். அந்த பாடலை பலரும் ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தனர்.



    தற்போது ஷாலு ஷம்முவும் ஆரஞ்சு நிற சேலையில் அந்த பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published:

    Tags: Viral Videos

    அடுத்த செய்தி