காம்ப்ரமைஸ் செய்ய சொன்ன பெரிய நடிகர்? ஷாலு ஷம்மு பகீர் தகவல்

காம்ப்ரமைஸ் செய்ய சொன்ன பெரிய நடிகர்? ஷாலு ஷம்மு பகீர் தகவல்

நடிகை ஷாலு ஷம்மு

பெரிய நடிகர்களின் படங்களில் அவர்களுடன் சமரசம் செய்து கொள்ளாவிட்டால்பெண்களின் திறமை நிராகரிக்கப்படுவதாக நடிகை ஷாலு ஷம்மு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
வருத்தப்படாத வாலிபர் சங்கம், றெக்க, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறார். இந்நிலையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “பெரிய நடிகர்களின் படங்களில் சமரசம் செய்து கொள்ளாவிட்டால் பெண்களின் திறமை நிராகரிக்கப்படுகிறது. எங்களுக்கு மாற்றம் வேண்டும். துன்புறுத்தலை நிறுத்துங்கள். நாங்கள் ஒரு போதும் சமரசம் செய்யமாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியிருந்த ஷாலு ஷம்மு அதையும்  இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான பல பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தியப் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “Metoo” என்ற பெயரில் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்தனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த MeToo இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் குற்றம் சாட்டப்பட்டனர்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மீது அதிரடியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதேபோல் பின்னணி பாடகி சின்மயி வைத்த குற்றச்சாட்டுகளும் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: