ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

போட்டோ எடுத்தது அஜித்தா? ஷாலினி அஜித் தீபாவளி கொண்டாட்டம்… லைக்ஸை குவிக்கும் க்ளிக்!

போட்டோ எடுத்தது அஜித்தா? ஷாலினி அஜித் தீபாவளி கொண்டாட்டம்… லைக்ஸை குவிக்கும் க்ளிக்!

குடும்பத்தினருடன் ஷாலினி அஜித்.

குடும்பத்தினருடன் ஷாலினி அஜித்.

அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அண்ணன் ரிச்சர்ட், தங்கை ஷாமிலி உடன் ஷாலினி தீபாவளியை கொண்டாடியுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடிகை ஷாலினி அஜித் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான போட்டோ ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.

  இந்த பதிவுக்கு கமெண்ட் செய்துள்ள அஜித் ரசிகர்கள், துணிவு அப்டேட் கேட்டு பதிவிட்டுள்ளனர். நடிகை ஷாலினி அஜித் 1983- இல் குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானவர். அந்த ஆண்டிலேயே, குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதையும் ஷாலினி பெற்றுள்ளார்.

  தமிழில் அவர் விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் அஜித்துடன் நடித்த அமர்க்களம், விஜய்யுடன் மீண்டும் நடித்த கண்ணுக்குள் நிலவு, மாதவனுடன் அலைபாயுதே ஆகிய படங்கள் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

  தகதகவென மின்னும் தமன்னா.. கண்ணை கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்.!

  2001-ல் வெளியான பிரியாத வரம் வேண்டும் படத்தில் பிரசாந்துடன் அவர் இணைந்து நடித்திருப்பார். இதன் பின்னர் அவர் எந்த படமும் நடிக்கவில்லை. நடிகர் அஜித் - ஷாலினி திருமணம் 2000-ஆம் ஆண்டில் ஏப்ரல் 24ஆம் தேதி நடந்தது.

  கசிந்துருகும் காதல்.. ரொமான்டிக் படங்கள் பிடிக்குமா? அமேசான் ப்ரைமில் உள்ள சூப்பரான லவ் மூவிஸ்!

  1999-ல் அமர்க்களம் படத்தின் ஷூட்டிங்கின்போது, ஷாலினியுடன் அஜீத்துக்கு காதல் ஏற்பட்டது. இந்தப் படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பாக அஜித் தனது காதலை ஜூன் மாதம் ஷாலினியிடம் வெளிப்படுத்த, அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.

  அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அண்ணன் ரிச்சர்ட், தங்கை ஷாமிலி உடன் ஷாலினி தீபாவளியை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித் எடுத்தாரா என்று கேட்டு அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith, Deepavali