மதுரையில் நடிகை ஷகிலா பங்கேற்ற நிகழ்ச்சியின் முடிவின்போது புகைப்படம் எடுக்க ரசிகர்கள் சூழ்ந்ததால் அவரை பவுன்சர்கள் உதவியுடன் நடிகர் கஞ்சா கருப்பு வழியனுப்பி வைத்தார்.
மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 75 ஆவது வைரவிழா, தமிழக திரைப்பட துணை நடிகர், துணை நடிகைகள் மற்றும் திரைப்பட உதவியாளர் நல சங்கத்தின் முதலாவது ஆண்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிழ்ச்சியில் நடிகை ஷகிலா, நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, கிங் காங் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய நடிகை சகிலா , கொரோனா அதிகரித்து வருவதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் ஊனம் தொடர்பான பாடல்களை எடுத்து நடனமாட வேண்டாம், நல்ல பாடல்களை சூப்பர் பாடல்களை எடுத்து உங்களை நீங்கள் உத்வேகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
பின்னர் மேடையில் நடிகை ஷகிலா தனது மகள் ஷாஷா என திருநங்கை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து செல்லும் பொழுது ஷகிலாவின் ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க சூழ்ந்ததால் செய்வதறியாது திகைத்து நின்ற நிலையில் உடனடியாக அங்கு வந்த நடிகர் கஞ்சா கருப்பு பவுன்சர்களின் உதவியுடன் நடிகை ஷகிலாவை காரில் ஏற்றி வழி அனுப்பி வைத்தார்.
Also read... வாரிசு - துணிவு படங்கள் சிறப்பு காட்சிகள்... அச்சத்தில் திரையரங்கு உரிமையாளர்கள்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Shakeela