உள்ளாடை சைஸை கேட்ட நபர் - நடிகை கொடுத்த தில்லான பதில்!

உள்ளாடை சைஸை கேட்ட நபர் - நடிகை கொடுத்த தில்லான பதில்!

சயந்தனி கோஷ்

டிவி நடிகை சயந்தனி கோஷ் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் லைவில் அவரது உள்ளாடை அளவைக் கேட்ட ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்து இணையத்தை வென்றார்.

 • Share this:
  டிவி நடிகை சயந்தனி கோஷ் சமீபத்தில் ஒரு இன்ஸ்டாகிராம் லைவில் அவரது உள்ளாடை அளவைக் கேட்ட ஒருவருக்கு தக்க பதிலடி கொடுத்து இணையத்தை வென்றார். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ஒரு குறிப்பைப் பகிர்ந்த சயந்தனி, பாடி ஷேமிங்கிற்கு எதிராக பேசினார்.

  இது குறித்து இன்ஸ்டாகிராம் உரையாடலில் பேசிய அவர், "நேற்று எனது இன்ஸ்டாகிராம் அமர்வில் யாரோ ஒருவர் என் உள்ளாடை அளவைக் கேட்டார்! நான் அந்த நபருக்கு ஒரு பொருத்தமான பதிலைக் கொடுத்திருந்தாலும் (இதனால் நீங்கள் என்னை பாராட்டினீர்கள்) இன்னும் நான் பேச விரும்புகிறேன். பாடி ஷேமிங் என்பது தவறு!! குறிப்பாக, பெண்களின் மார்பகம் மீதான இந்த மோகம் ஏன் என்ற உண்மையை நோக்கி, நான் தலையைச் சுற்றிக் கொள்கிறேன்?? ஏ கப், பி, சி அல்லது டி என உள்ளாடை அளவில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்கள் கூட இந்த வகையான கண்டிஷனை வைத்திருக்கிறார்கள்!" என்று குறிப்பிட்டார்.   
  View this post on Instagram

   

  A post shared by Sayantani (@sayantanighosh0609)


  இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் பெண்கள் பாடி ஷேமிற்கு எதிராக பேசத் தொடங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட சயந்தனி, "ஆண்கள் என் மார்பகத்தை முறைத்துப் பார்க்கும் போது நானும் சங்கடமாக உணர்கிறேன். போதும் இது... பெண்கள் தம்மை முழுமையாக நேசிக்கத் தொடங்கும் நேரம் வந்துவிட்டது. ஆணோ, பெண்ணோ எந்த வகையிலும் உங்களை அவமதிக்கும் எவருக்கும் பதில் சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: