என்னை யாரும் கடத்தவில்லை - தொரட்டி பட நாயகி பேட்டி!

news18
Updated: August 1, 2019, 4:59 PM IST
என்னை யாரும் கடத்தவில்லை - தொரட்டி பட நாயகி பேட்டி!
தொரட்டி பட நாயகி சத்தியகலா
news18
Updated: August 1, 2019, 4:59 PM IST
என்னை யாரும் கடத்தவில்லை என்று தொரட்டி பட நாயகி சத்தியகலா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

’ஷாமன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் 'தொரட்டி'. இந்த படத்தில் சத்தியகலா என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் கதாநாயகி திடீரென மாயமானதாக தகவல்கள் வெளியானது.

இது தொடர்பாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்த பட தயாரிப்பு நிறுவனம், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26-ம் தேதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளது.


அதில், சினிமாவில் நடிப்பது தன்னுடைய தந்தை மற்றும் வளர்ப்பு தாய்க்கு பிடிக்காததால் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக படக்குழுவினரிடம் சத்தியகலா புலம்பி வந்ததாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சத்தியகலா வசித்து வந்த வீட்டில் தற்போது யாரும் இல்லாத நிலையில் சத்தியகலாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால் அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் பட நிறுவனம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தந்தையால் கடத்தப்பட்ட சத்தியகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Loading...

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியகலாவை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகை சத்தியகலா, தான் கடத்தப்பட்டதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் படத்தின் விளம்பரத்திற்காக தனது குடும்பத்தை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் சத்தியகலா கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய நடிகை சத்தியகலா படத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் தயாரிப்பாளர்களுக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாகவே இவ்வாறு தவறான தகவல்கள் பரப்பியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார்.

Also see...

First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...