புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணநிதிக்கு வழங்கிய பிரபல நடிகை..

நடிகை சரண்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தனது அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்திருந்தார்.

Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 5:46 PM IST
புற்றுநோய் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தை நிவாரணநிதிக்கு வழங்கிய பிரபல நடிகை..
மலையாள நடிகை சரண்யா
Web Desk | news18-tamil
Updated: August 17, 2019, 5:46 PM IST
கேரள, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கேரளாவின் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ முதல்வர் நிவாரண நிதிக்கு பலர் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றர்.


இந்நிலையில் மலையாள சீரியல் மற்றும் திரைப்பட நடிகையான சரண்யா தனது புற்றுநோய் சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு பங்கை வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

நடிகை சரண்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அறுவை சிகிச்சைக்காக குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்திருந்தார்.

இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு தன்னால் முடிந்த உதவியாக சிகிச்சைக்கு வைத்திருந்த பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நிதியாக அளித்துள்ளார்.

Loading...


இதனை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகையின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டினை தெரிவித்து வருகின்றனர்.

Also Read : பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார்?

Also Watch

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...