• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Sanam Shetty: பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு வந்த ஆபாச மெசேஜ்.. சைபர் க்ரைமில் புகார்

Sanam Shetty: பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டிக்கு வந்த ஆபாச மெசேஜ்.. சைபர் க்ரைமில் புகார்

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி

சனம் ஷெட்டி சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

  • Share this:
    ஆபாச குறுஞ்செய்திகள் வருவதாக பிக்பாஸ் புகழ் சனம் ஷெட்டி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கூடுதலாக பிரபலமடைந்தார். சமூகவலைத் தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரை ஏராளமானோர் இன்ஸ்டாவில் பின் தொடர்கின்றனர்.

    இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவரிடமிருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆபாசக் குறுஞ்செய்திகள் வந்த வாட்ஸ்-ஆப் எண்ணையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தையும், இதர ஆதாரங்களையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் அந்த வாட்ஸ்-ஆப் எண் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து விசாரணையைத் துவங்கியுள்ளனர்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: