Home /News /entertainment /

நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு படப்பிடிப்பில் காயம்

நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு படப்பிடிப்பில் காயம்

சம்யுக்தா ஹெக்டே

சம்யுக்தா ஹெக்டே

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பிறகு சம்யுக்தா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது.

    தமிழில் கோமாளி, பப்பி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா ஹெக்டே. ஜெயம் ரவியின் பள்ளி பருவ காதலியாக கோமாளி படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது அவர் கிரீம் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் அபிஷேக் பசந்த் இயக்கி வருகிறார்.

    சோஷியல் த்ரில்லர் படமான க்ரீமின் செட்டில் ஒரு ரிஸ்க்கான சண்டைக் காட்சியை படமாக்கும் போது சம்யுக்தாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கணுக்கால் மற்றும் முழங்காலில் காயம் அடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்யுக்தா தன்னை வற்புறுத்தி ஆபத்தான சண்டைக்காட்சிகளை தானே செய்ததாக இயக்குநர் அபிஷேக் பசந்த் பகிர்ந்து கொண்டார்.

    மெல்போர்னில் திரையிடப்படும் சூர்யாவின் ஜெய்பீம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணிநேரங்களுக்குப் பிறகு சம்யுக்தா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். க்ரீமின் திரைக்கதையை அக்னி ஸ்ரீதர் எழுதியுள்ளார். சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை டி.கே.தேவேந்திராவின் சம்வர்தினி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    Published by:Shalini C
    First published:

    Tags: Samyuktha hegde, Tamil Cinema

    அடுத்த செய்தி