ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங்.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங்.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா!

யசோதா படத்தில் சமந்தா

யசோதா படத்தில் சமந்தா

முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை ரசிகர்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால்…

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்காக நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

  இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்துள்ள படம் 'யசோதா'. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

  வரும் நவம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகின்ற நிலையில் நேற்று முன்தினம் வெளியான ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. இந்தப் படத்தை ஹரி-ஹரிஷ் இயக்கியுள்ளனர். மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

  விறுவிறுப்பாக நடைபெறும் ‘துணிவு’ படத்தின் போஸ்ட் புரொடக்சன்… எச்.வினோத் ஃபோட்டோ வைரல்…

  சைன்ஸ் ஃபிக்ஷன் ஆக்ஷன் ஜானரில் யசோதா படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

  ' isDesktop="true" id="827210" youtubeid="7rsRx_VtlQU" category="cinema">

  இந்நிலையில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றிக் கொண்டே யசோதா படத்திற்கு நடிகை சமந்தா டப்பிங் பேசியுள்ளார். இதுதொடர்பான அவரது இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

  விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் அப்டேட்… விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு…

  சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘யசோதார ட்ரெய்லருக்கு ரசிகர்களாகிய நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ளும் இந்த அன்புதான், வாழ்க்கை எனக்கு அளிக்கும் சவால்களைச் சமாளிக்க வலிமை அளிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் ஆட்டோ இம்யூன் பிரச்னை (இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவது) இருப்பது கண்டறியப்பட்டது.
   
  View this post on Instagram

   

  A post shared by Samantha (@samantharuthprabhuoffl)  முழுமையாக குணம் அடைந்த பின்னர் இந்த விஷயத்தை உங்களிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த பிரச்னை குணம் அடைவதற்கு கூடுதல் காலம் எடுக்கும்.

  இந்த பாதிப்பை ஏற்றுக் கொண்டு அதனுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். நான் விரைவில் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எனக்கு நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு.’ என்று கூறியுள்ளார். சமந்தாவுக்கு ஆறுதல் தெரிவித்தும், பூரண குணம் அடைய வாழ்த்து கூறியும் ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actress Samantha