ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திரையரங்கில் வெளியான யசோதா... ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்ட சமந்தா

திரையரங்கில் வெளியான யசோதா... ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்ட சமந்தா

யசோதா

யசோதா

சமந்தா அந்த பதிவில் "உங்கள் அனைவருக்கும் என்றென்றும் நன்றியுடையவள். நீங்கள் என் குடும்பம் நீங்கள் படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி" என கூறியுள்ளார்

  • News18 India
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

    நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி உள்ள நிலையில் அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளார்.

    சமந்தா அந்த பதிவில் "முன்னெப்போதையும் விட இந்த முறை, படத்தை விளம்பரப்படுத்த உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன், பிரார்த்தனை செய்கிறேன். ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் என் மீதும் யசோதா மீதும் நீங்கள் பொழிந்த பாசம் நெகிழ செய்துள்ளது. உங்கள் அனைவருக்கும் என்றென்றும் நன்றியுடையவள். நீங்கள் என் குடும்பம் நீங்கள் படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி"

    சமந்தாவின் யசோதா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. வாடகைத்தாயை  மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது யசோதா திரைப்படம். வாடகைத்தாய் என்பது குழந்தை பெற இயலாதவர்களுக்கு வரப்பிராசாதமாக கருதப்படுகிறது.

    தனது நடிப்பு திறமையால் இந்திய ரசிகர்களை கவர்ந்த சமந்தா, ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார்.

    Read More: நடிகை துஷாரா விஜயனின் இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ்..

     ட்ரைலரை பார்க்க :

    ' isDesktop="true" id="834613" youtubeid="jvYZVcuJzR4" category="cinema">

    யசோதா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதில் சமந்தாவுடன் இணைந்து, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    Read More: ஜொலிக்கும் உடையில் நடிகை ஹினா கான் - லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

    படத்தின் இசையமைப்பாளராக மணி சர்மா, ஒளிப்பதிவாளராக சுகுமார் மற்றும் எடிட்டராக மார்த்தாண்ட வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்

    Published by:Srilekha A
    First published:

    Tags: Actress Samantha