• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகை சமந்தாவுக்கு மன அழுத்தம்

நடிகை சமந்தாவுக்கு மன அழுத்தம்

சமந்தா

சமந்தா

சமந்தா, நாக சைத்தன்யா பிரிவு தென்னிந்திய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

  • Share this:
    நடிகை சமந்தா தான் மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    நடிகை சமந்தா தனது கணவர் நாக சைத்தன்யாவை பிரிவதாக சில வாரம் முன்பு அறிவித்தார். இதையறிந்த ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பில் இருந்தார் என்றெல்லாம் இந்த பிரிவுக்கு காரணமாக பல தகவல்கள் பரவின.

    இதைத் தொடர்ந்து, இது போன்ற வதந்திகளை தான் வலிமையுடன் கடந்து வருவேன் என சமூக வலைதளங்களில் தெரிவித்தார் சமந்தார். இந்நிலையில் தற்போது மன அழுத்தத்தில் இருக்கும் சமந்தா, அதிலிருந்து விடுபட, தினமும் யோகா செய்து வருகிறார். இது குறித்து பேட்டியளித்துள்ள அவர், “‘எனக்கு மன அழுத்தம் உள்ளது. இடைவிடாது படப்பிடிப்புகளில் பங்கேற்கிறேன். ஓய்வில்லாமால் பணியாற்றும்போது மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். மன அழுத்ததில் இருந்து விடுபட உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை செய்கிறேன்.

    அதோடு மன அழுத்தம் ஏற்படும் போது நான் மிகவும் விரும்பி வளர்க்கும் நாய் குட்டியுடன் விளையாடுகிறேன். முன்பெல்லாம் வளர்ப்பு பிராணிகள் மன அழுத்தத்தை குறைக்கும், என யாராவது சொன்னால் அதை நம்ப மாட்டேன். ஆனால் இப்போது அவைகளோடு சிறிது நேரம் விளையாடினால் போதும், நான் எந்த அளவுக்கு மென்மையாகிறேன் என்பது புரிகிறது. இன்னும் ஓய்வு வேண்டும் என்று நினைத்தால் நண்பர்களுடன் சுற்றுலா செல்ல முயற்சிப்பேன்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: