குழந்தைப் பெற்றுக்கொள்வதைப் பற்றி சமீபத்திய நேர்க்காணல் ஒன்றில் சமந்தா பேசியது, இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த அக்டோபர் 2-ம் தேதி நாக சைதன்யாவிடமிருந்து
பிரிவதாக அறிவித்த சமந்தா, இணையத்தில் பல்வேறு வெறுப்புகளை எதிர்கொண்டார். சிலர் அவர் கர்ப்பத்திற்கு எதிரானவர் என்றும், கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் வதந்திகளை பரப்பினர்.
அதற்கு சமந்தா வலுவான அறிக்கையால் பதிலடி கொடுத்தார். அதோடு குழந்தை பெறத் திட்டமிட்டிருந்த
சமந்தா, அதற்குள் தனது படங்களை முடித்து விட்டு, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் முன்னரே செய்திகள் வெளியாகின.
தற்போது கர்ப்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வலி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார் சமந்தா. "பெண்கள் உண்மையில் வலிமையானவர்கள். உலகில் மிகவும் வேதனையான ஒன்று பிரசவம். பிரசவத்தின் போது பெண்கள் மிகவும் வேதனையை அனுபவிக்கிறார்கள். ஆனால் அதன் முடிவில், எல்லா வலிகளையும் மறந்து, தன் குழந்தையைப் பார்த்து புன்னகைக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் விடுமுறையைக் கழிக்கும் சமந்தா, அங்கிருந்து திரும்பியதும் படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.