• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’செய்ய விரும்பும் விஷயங்கள் குறித்து கனவு காண்கிறேன்’ - திருமண முறிவுக்கு பிறகு சமந்தாவின் சமூகவலைதள பதிவு!

’செய்ய விரும்பும் விஷயங்கள் குறித்து கனவு காண்கிறேன்’ - திருமண முறிவுக்கு பிறகு சமந்தாவின் சமூகவலைதள பதிவு!

சமந்தா

சமந்தா

விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தா போட்டிருக்கும் பதிவொன்று தற்போது வைரலாகி வருகிறது.

  • Share this:
    நாக சைத்தன்யாவுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததை அறிவித்த சமந்தா, அதன் பிறகு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள செய்தி தான் தற்போதைய ஹாட் டாபிக்.

    நடிகை சமந்தா ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை தங்களது திருமண உறவு முடிவுக்கு வந்திருப்பதை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும்.

    ஒன்றாக படங்களில் நடித்து காதலிக்க தொடங்கிய இவர்கள், கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களின் பிரிவு சமந்தா - நாக சைத்தன்யா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தா போட்டிருக்கும் பதிவொன்று தற்போது வைரலாகி வருகிறது.

    Change My Clothes என்ற Dream & Alec Benjamin பாடல் பாட, அதன் வரிகள் சமந்தாவின் போஸ்டில் இடம் பெற்றிருக்கின்றன. அதில், “If I wanna change the world, I should change myself. I should make my bed. I should dust the shelf, shouldn't lie in the bed 'til the afternoon, dreamin' 'bout the things that I wanna do, mmm, mmm.” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: