• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யூ-ட்யூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு

யூ-ட்யூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா அவதூறு வழக்கு

சமந்தா

சமந்தா

தன்னைப் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பியதாக சுமன் டிவி உள்ளிட்ட சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
    நடிகை சமந்தா தன் மீது அவதூறு பரப்பிய யூ-ட்யூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. ஆனால் இது குறித்து அவர்கள் இருவரும் வாய் திறக்கவில்லை. வெறும் வதந்தியாகவே இது முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர் சமந்தாவும், நாக சைத்தன்யாவும்.

    இதைத் தொடர்ந்து, இவர்கள் பிரிவுக்கு காரணமாக சமந்தாவை குற்றம்சாட்டி, பல செய்திகள் இணையத்தில் வலம் வந்தன. இதையடுத்து தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த விதமான எதிர்மறை விஷயங்களும் தன்னை பாதிக்காது என்றும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் சமந்தா.

    இந்நிலையில் தன்னைப் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பியதாக சுமன் டிவி உள்ளிட்ட சில யூ-ட்யூப் சேனல்கள் மீது சமந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாகப் பேசியதாக, அவர் மீதும் சமந்தா வழக்கு தொடர்ந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: