Home /News /entertainment /

விவாகரத்து அறிவிப்பை திடீரென நீக்கிய சமந்தா - குழப்பத்தில் ரசிகர்கள்!

விவாகரத்து அறிவிப்பை திடீரென நீக்கிய சமந்தா - குழப்பத்தில் ரசிகர்கள்!

சமந்தா

சமந்தா

சமீபத்தில் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் எனத் தெரிவித்திருந்தார் நாக சைத்தன்யா.

    நடிகை சமந்தா நாக சைத்தன்யா உடனான பிரிவு அறிவிப்பை திடீரென இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியுள்ளார்.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இதனையடுத்து இன்ஸ்டாகிராமில் சைத்தன்யாவுடனான படங்கள் அனைத்தையும் நீக்கினார் சமந்தா. ஆனால் நாக சைத்தன்யா இன்னும் படங்களை நீக்கவில்லை. இந்நிலையில் அவருடனான பிரிவு அறிவிப்பை திடீரென இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியிருக்கிறார் நடிகை சமந்தா. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Dhanush: தனுஷுக்கு ரஜினிகாந்த் கொடுத்த பரிசு... அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா?

    இதற்கிடையே சமீபத்தில் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தா தான் எனத் தெரிவித்திருந்தார் நாக சைத்தன்யா. பிரிவு சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா, ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின்!

    இது தவிர, தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர் தனுஷ் தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக சில தினங்கள் முன்னர் அறிவித்தார். 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிக்கையில் அவர்கள் தெரிவித்தனர். இது ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha

    அடுத்த செய்தி