Home /News /entertainment /

சமந்தா செய்த விஷயம்... அதிர்ச்சியடைந்த நாக சைத்தன்யா குடும்பத்தினர்

சமந்தா செய்த விஷயம்... அதிர்ச்சியடைந்த நாக சைத்தன்யா குடும்பத்தினர்

சமந்தா - நாக சைத்தன்யா

சமந்தா - நாக சைத்தன்யா

தங்கள் வேறுபாடுகளைக் களைந்து சமந்தாவும், நாக சைத்தன்யாவும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

    சமந்தா - நாக சைத்தன்யா மீண்டும் இணைவார்களா என்ற கேள்வி வலம் வந்த நிலையில் தற்போது அவர்கள் இணைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

    படங்களில் ஒன்றாக நடித்து காதலில் விழுந்த சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்து - கிறிஸ்டியன் என இரு முறைப்படியும் நாகசைத்தன்யா - சமந்தாவின் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா. சமீபத்தில் இவரது நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    ஐஸ்வர்யாவை பிரிந்த தனுஷ் வெளியிட்ட மகிழ்ச்சியான புகைப்படம்!

    இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன. இது வெறும் வதந்தியாகவே முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!

    இதையடுத்து தங்கள் வேறுபாடுகளைக் களைந்து சமந்தாவும், நாக சைத்தன்யாவும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதாவது தனது திருமண புடவையை நாக சைத்தன்யா குடும்பத்திடம் கொடுத்துவிட்டாராம் சமந்தா. இனி அவருடன் இணைய வேண்டாம் என முடிவெடுத்து தான் அவர் இவ்வாறு செய்திருக்கிறார் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Actress Samantha, Tamil Cinema

    அடுத்த செய்தி